25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


விம்பிள்டனில் ஜோகோவிச் வரலாறு; பெடரரின் சாதனையை எட்டினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விம்பிள்டனில் ஜோகோவிச் வரலாறு; பெடரரின் சாதனையை எட்டினார்.

லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், முன்னாள் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது ஆதிக்கத்தை தொடர்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில், பிரான்சின் ஆர்தர் ரின்டர்க்னெச்சை 7-5, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்திய ஜோகோவிச், 4-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார். இது விம்பிள்டனில் அவர் பதிவு செய்த 105-வது வெற்றியாகும்.

இதன் மூலம், விம்பிள்டனில் அதிக வெற்றிகள் பெற்ற வீரர் என்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில், உலகின் நம்பர்-1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜென்சனை 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா, லாத்வியாவின் ஒஸ்டாபென்கோவை 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News