சின்க்பீல்டு கோப்பை செஸ்: 6-வது சுற்றில் பிரக்ஞானந்தா ‘டிரா’.
கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 6-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் லெவோன் அரோனியனை எதிர்கொண்டார்.
வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-வது நகர்த்தலில் ஆட்டத்தை ‘டிரா’ செய்தார்.
0
Leave a Reply