ஐயப்ப பக்தர்களில் ஒரு சிலர் தென்னங்கன்று எடுத்துசெல்கிறார்களே ஏன் தெரியுமா?
ஒருவர் வருடா வருடம் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து 17 வருடம் ஐயப்பனை தரிசித்த பிறகு 18 வது வருடம் தென்னங்கன்றை எடுத்து செல்வார்கள்.
தென்னங்கன்று வைத்திருக்கும் ஐயப்ப பக்தர் அன்று முதல் குருசாமி ஆவார். அவரை பார்த்த மற்ற பக்தர்கள் அவரிடம் சென்று ஆசி வாங்குவார்கள்.
ஒருவருக்கு 18 வருடங்கள் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் வந்து போவது அதிக சாத்தியம் இல்லாதது. இந்த பதினெட்டாம் வருடம் யாத்திரை புனித யாத்திரையாக கூறுவார்கள்.
0
Leave a Reply