25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


நோயாளிகள் நலச்சங்க கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோயாளிகள் நலச்சங்க கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் (22.10.2026) நடைபெற்றது.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவமனையின் சேவைகளின் தரத்தை உயர்த்திட அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்கம் செயல்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், அரசிடமிருந்து ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்கள் குறித்தும், மருத்துவமனைக்கு தேவையான வசதிகள், உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவமனையின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாகும்.இன்று நடைபெற்ற கூட்டத்தில் நோயாளிகள் நலச்சங்கத்தின் வாயிலாக மருத்துவமனையின் தேவைகளைக் கண்டறிந்து, நோயாளிகளின் நலன் மற்றும் மருத்துவச் சேவைகளின் மேம்பாட்டிற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி மருத்துவமனைக்குத் தேவையான இதய செயல்திறன் பரிசோதனைக்கருவி, பிரேதங்களைப் பாதுகாக்கும் குளிர்சாதனப்பெட்டி, அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கிட ஏதுவாக மாவு அரைக்கும் இயந்திரம், இசிஜி இயந்திரம், கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனைக் கருவி (Fetal Doppler), பல் சிகிச்சை இருக்கை, சலவை இயந்திரம், கண்புரை நோய் அறுவை சிகிச்சை கருவி, குளிரூட்டும் பெட்டிகள், நோயாளிகள் பரிசோதனை மேஜை, மயக்க மருந்து பணி நிலையம் (Anesthesia work station), இரத்த பரிசோதனை கருவி, மின் தூக்கி பழுது சரிசெய்தல், நோயாளிகளுக்கான கட்டில்கள், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை கருவி, அவசரகால படிக்கட்டு கட்டுதல், புதிய கட்டிடங்களுக்கு ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்துதல், குடிநீர் தொட்டி, கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பலகை நிறுவுதல், பிணவறையை மாற்றுதல் உள்ளிட்ட 27  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் மருத்துவ சேவைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி நோயாளிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துதல், ஒவ்வொரு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சில உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பட்டியலிடப்பட்டு, சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் முன்னுரிமை அடிப்படையில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பிரிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார்.இந்நிகழ்வில், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.காளிராஜ், மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் நோயாளிகள் நலச்சங்க ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News