ஒலிம்பிக்" போல் வால்ட் "போட்டியில் உலக சாதனை படைத்த டுப்ளான்டிஸ்.
.சுவீடனை சேர்ந்தவர் அர்மாண்ட் டுப்ளான்டிஸ், 24 ,இவரது தந்தை கிரக் (அமெரிக்கா) சிற்ந்த போல்வால்ட் வீரர். இவரது தாய் ஹெலினா (சுவீடன் வாலிபால்), ஹெப்டாத்லான் வீராங்கனை, பெற்றோரை போல டுப்ளான்டிகம் தடகத்தில் இறங்கினார். தந்தை பயிற்சி அளிக்க, போல் வால்ட் போட்டியில் ஜொலித்தார். தாய் வழியில் சுவீடனுக்கான சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் 6.02 மீட்டர் வென்ற இவர் ,மீண்டும் சாதிக்கும் இலக்குடன் பாரிசில் களமிறங்கினார்.
கார்பன் பைபரில் தயாரான போல் வால்ட் உடன் வேகமாக ஒடி வந்த டுப்ளான்டிஸ் முதல் வாய்ப்பில் 5.70 மீட்டர் தாவினார். பின் 6.00 மீட்டர். (19.7 அடி) உயரம் தாவிய போது தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார்.
இதற்கு பின் சாதனை முயற்சிக்காக உயரத்தை அதிகரித்தார். டுப்ளான் டிஸ். 6.10 மீட்டர் உயரத்திற்கு 20 அடி தாவிய போது,புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். கிட்டத்தட்ட இரண்டு மாடி கட்டட உயரத்திற்கு தாவி ரசிர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
டுப்ளான்டிசை “மோண்டோ ”என செல்லமாக அழைக்கின்றனர். இத்தாலி மொழியில் மோண்டோ என்றால் உலகம் என அர்த்தம். இதற்கு ஏற்ப “போல் வால்ட்டில்” உலக சாதனை படைத்து வருகிறார்.
0
Leave a Reply