25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) ஓய்வூதியத்திட்டத்திற்கு தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) ஓய்வூதியத்திட்டத்திற்கு தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யலாம் .

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) என்ற  ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அவர்களின் சமூகப்பாதுகாப்பும், பொருளாதார நிலைத்தன்மையும் உறுதி செய்யப்படுகிறது.

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) திட்டம் என்பது  18 முதல் 40 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத்திட்டமாகும். இத்திட்டத்தில் மேற்கண்ட தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், இந்திய அரசும் அதே அளவு இணைப்பங்களிப்பை வழங்கும். இதன் மூலம், 60 வயதை அடைந்த பின்னர் மாதந்தோறும் ரூ.3,000/- உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி வழங்கப்படுகிறது.
சுற்றுலா வழிகாட்டிகள்(Tourist Guides), சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் (Facilitators), சுற்றுலா வாகனஓட்டுநர்கள் (Tourist Transport Operators) மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல்துறை பணியாளர்கள் (Hospitality Workers), துப்புரவுப் பணியாளர்கள் (House Keeping Staffs), கைவினைக் கலைஞர்கள் (Artisans), தெருவோர வியாபாரிகள் (Street Vendors),  உணவக மற்றும் உணவுச் சேவை வழங்குநர்கள் (Hotel Workers). மேலும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிறசேவை வழங்குநர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடையவர்களாவர்.

எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தகுதியுடைய தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கிடவும்,

தகுதியுடைய அனைத்து தொழிலாளர்களும் தங்களது ஆதார் அட்டை, சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகம் (Bank Passbook) மற்றும் கைப்பேசி எண்ணுடன், அருகிலுள்ள பொது சேவை மையத்தை (Common Service Centre - CSC) அணுகி, இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும், விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், அறை எண்.522, 5-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம், அல்லது  7397715688 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News