கபடி: ஜப்பானை வீழ்த்திய இந்திய ஆண்கள் அணி.
ஆண்களுக்கான கபடி 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இந்திய அணி 31-9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தைத் தொடர்ந்த இந்திய அணி 18 புள்ளிகளைச் சேர்த்தது. ஜப்பான் அணி 15 புள்ளிகளை மட்டுமே பெற்றது.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 49-24 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு 8 ஆல்-அவுட் மற்றும் 2 சூப்பர் டேக்கிள் புள்ளிகள் கிடைத்தன.
மகளிர் கபடியிலும் வெற்றி.
பெண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது.
ஆட்டம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், 42-21 என்ற புள்ளிக் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தனர்.
0
Leave a Reply