கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நில விவசாயிகள் மற்றும் தோந்தெடுக்கப்பட்ட கிராம விவாசயிகள் மானியம் பெற உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட 91 கிராம பஞ்சாயத்துகளில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு எக்டர் ஒன்றிற்கு 75% மானியத்தில் ரூ.7500/- மதிப்பிற்கு வீரிய ஒட்டு காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் 110 எக்டர் பரப்பிற்கும், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த ரூ.200/- மதிப்பில் மா/சப்போட்டா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை மற்றும் சீத்தா போன்ற 5 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 18,330 எண்கள், 75 சதவீத மானியத்தில் ரூ.150/-க்கும் மீதி ரூ.50/- பயனாளிகளின்; பங்கு தொகையுடன் விநியோகம் செய்யப்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும் எக்டர் ஒன்றிற்கு ரூ.18,000/- மானியத்தில் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் வீரிய ஒட்டு மா, கொய்யா, எலுமிச்சை, கொடுக்காபுளி, சப்போட்டா போன்ற செடிகளுடன் இடுபொருட்களும் 110 எக்டர் பரப்பிற்கு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
0
Leave a Reply