பண்ணைக்கீரை திணை அரிசி புலாவ்
தேவையான பொருட்கள்-
2 கப் பண்ணை கீரை இலைகள்,
1 கப் திணை அரிசி,
பட்டை, கிராம்புஏலக்காய், ஸ்டார்,பிரிஞ்சி இலை,
1வெங்காயம்,
3 பச்சை மிளகாய்,
1 தக்காளி பழம் அல்லது காய்,
1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
உப்பு தேவைக்கேற்ப,
1டேபிள்ஸ்பூன் நெய்.
செய்முறை -
பண்ணைக்கீரையை இலைகள் மட்டும் பிரித்தெடுத்து நன்கு கழுவி வைக்கவும். திணை அரிசியை கழுவி தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி,கீரை,பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து,கிராம்பு,ஏலக்காய், ஸ்டார்,பட்டை,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளி,கீரையை சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் ஊற வைத்து வைத்துள்ள திணை அரிசியை சேர்த்து நன்கு கலந்து, தேவைக்கேற்ப தண்ணீர்,உப்பு சேர்த்து மூடி வைக்கவும். மூன்று கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது.
பத்து நிமிடங்கள் கழித்து ஒரு முறை கலந்து மிதமான சூட்டில் பதினைந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.
பின்னர் திறந்து நன்கு கலந்தால் சுவையான பண்ணைக்கீரை திணை அரிசி புலாவ் தயார்.
0
Leave a Reply