25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்புக்கான மானியமும் மற்றும் சாகுபடி தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்புக்கான மானியமும் மற்றும் சாகுபடி தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

பருத்தி உற்பத்தி திறன் இயக்க திட்டமானது, பருத்தியின் விளைச்சலை அதிகரிக்கவும், தரத்தை உயர்த்தவும் மற்றும் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஒரு சிறப்பு திட்டமாகும்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பு, உயர் அடர்த்தி நடவு முறை (HDPS), நெருக்கமான இடைவெளி சாகுபடி (Closer Spacing) போன்ற நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்துதல், பருத்தி விவசாயத்தில் வருமானத்தை அதிகப்படுத்துதல் போன்றவற்றிற்காக இத்திட்டம் 2026-27-ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட உள்ளது.  

இத்திட்டத்தில் குறைந்த பரப்பளவில் அதிக செடிகளை பயிரிடும் முறைகளான உயர் அடர்த்தி நடவு முறை (High Density Planting System) செயல்விளக்கத்திடலுக்கு ரூ.14,000/-யும், நெருக்கமான இடைவெளி சாகுபடி (Closer Spacing) செயல்விளக்கத்திடலுக்கு ரூ.18,500/-யும், மிக நீண்ட இழையுடைய பருத்தி சாகுபடி (Extra Long Stable Cotton Cultivation) செயல்விளக்கத்திடலுக்கு ரூ.9,500/-யும், பருத்தியின் வளர்ச்சியை மேம்படுத்தவும், அதிக மகசூல் பெறவும், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை சாகுபடி (Integrated Crop Management) செயல்விளக்கத்திடலுக்கு ரூ.7,500/-இம், ட்ரோன் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்புக்கான செலவில் 50% மானியமும் மற்றும் மேற்குறிப்பிட்ட சாகுபடி தொடர்பான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.  

  விருதுநகர் மாவட்டத்திற்கு மேற்குறிப்பிட்ட சாகுபடி செயல்விளக்க திடல்கள் 1660 எக்டேரும், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு மானியம் 800 எக்டேருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேற்கூறிய திட்டத்தில் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.ஷரண்யா அறி I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.    

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News