25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அத்திபழ பர்பி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அத்திபழ பர்பி.

தேவையான பொருட்கள்:
20 அத்திப்பழம்,

5 பேரிச்சம் பழம், 

1 லிட்டர் புல் க்ரீம் மில்க்,

100 கிராம் இனிப்பில்லாத கோவா

,100 கிராம் சர்க்கரை,

1/2 கப் நட்ஸ்,

1 டேபிள்ஸ்பூன் கசகசா,

1ஸ்பூன் ஏலத்தூள்,
3 டேபிள்ஸ்பூன் நெய், விருப்பப்பட்டால் சில்வர் தாள்.


செய்முறை :


அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழம் ஆகிய இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின் வாணலியில் நெய் விட்டு சூடானதும் நறுக்கிய அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தை
சேர்த்து வதக்கவும்.
மெல்லிய தீயில் வைத்து வதக்கவும் பின் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு வேகவிடவும்.

பாலுடன் சேர்ந்து அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழம், நன்கு வெந்ததும் பால் முழுவதும்
சுண்டியதும், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பின் ஏலத்தூள் நட்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்.
பின் உதிர்த்த கோவா சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி ,நெய் தடவிய ட்ரேயில் வறுத்த கசகசாவை தூவி
விட்டு ,அதன் மேல் இந்த கலவையை கொட்டி சமப்படுத்தி மேலே சில்வர் தாள் ஒட்டி ,அரை மணி
நேரம் வரை செட் செய்யவும். பின் விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News