25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பன்னீர் ரோஜா செடி முழுவதும் கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்க.....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பன்னீர் ரோஜா செடி முழுவதும் கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்க.....

ரோஜா வகைகளில் பன்னீர் ரோஜா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனுடைய மணமும், குணமும் விசேஷமான தன்மை உள்ளது. பன்னீர் ரோஜாவை கொண்டு பல்வேறு வாசனை திவிரயங்கள் தயார் செய்யப்படுகின்றன. பன்னீர் பல மருத்துவ விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பன்னீர் ரோஜா பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் நம்முடைய கண்களுக்கு குளிர்ச்சிபடுத்துவதாக அமைந்திருக்கிறது.நாம் நர்சரிகளில் வாங்கும் பன்னீர் ரோஜா வாங்கிய புதிதில் பெரிய பெரிய மொட்டுக்களும், நிறைய பூக்களும் பூத்திருக்கும். ஆனால் வீட்டிற்கு வாங்கி வந்தவுடன் பார்த்தால் புதிதாக மொட்டுக்களும் நிறைய வைப்பதில்லை. 

நர்சரிகளில் செயற்கையாக கொடுக்கப்படும் உரங்களினால் செடிகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் இருக்கின்றன. அதை நாம் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கும் பொழுது அந்த அளவிற்கு நிறைய மொட்டுக்கள் வைப்பதில்லை. இதற்கு இரண்டு வகையான டிப்ஸ்கள் உள்ளன. அதை சரியாக செய்து வந்தாலே ஒவ்வொரு கிளையிலும் அதிகம் மொட்டுக்கள் வைக்கத் துவங்கி விடும். செடி முழுவதும் கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்கும்பன்னீர் ரோஜா மட்டுமல்ல எந்த வகையான ரோஜா செடிகளுக்கும் இந்த பராமரிப்பை கட்டாயம் செய்ய வேண்டும். ஒருமுறை மொட்டுக்கள் வைத்த கிளையில் திரும்பவும் மொட்டுகள் வரவில்லை என்றால் அந்த கிளையை வெட்டி விட வேண்டும். அந்தக் கிளையின் அடிபாகத்தில் இலைகள் துளிர்க்காது. இதை வைத்தே அந்த கிளையை தேவையில்லாத கிளை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

அந்தக் கிளையை மட்டும் முக்கால் பாகத்தில் வெட்டிவிட்டு கால் பாகத்தை அப்படியே விட்டு விடுங்கள். அதிலிருந்து புதிய கிளை பச்சையாக மீண்டும் முளைக்கத் தொடங்கிவிடும். புதியதாக வரும் கிளையில் நிறைய மொட்டுக்கள் பூக்கும். வாரம் ஒரு முறை இதற்கு ஊட்டச் சத்தான உரத்தை நாம் கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்று. பன்னீர் ரோஜா செடிக்கு நாம் நர்சரிகளில் காசு கொடுத்து உரத்தை வாங்கி போடுவதை விட வீட்டிலேயே வேண்டாம் என்று தூக்கி எறியும் சில பொருட்களை வைத்து உரம் கொடுத்தால் நன்றாக செழித்து வளரும்.அன்றாடம் சமையல் செய்யும் பொழுது கிடைக்கும் காய்கறிகளுடைய தோல் மற்றும் பழங்களின் தோல் இவைகளில் இருக்கும் அதிக சத்துக்கள் பன்னீர் ரோஜா செடி சிறப்பாக வளர உதவியாக இருக்கும். 

வெங்காய தோல், பூண்டு தோல், பழங்களின் தோல்கள் இவற்றை தனித்தனியாக சேகரித்துவாரம் ஒருமுறை உங்களுடைய பன்னீர் ரோஜா செடி வைத்திருக்கும் தொட்டியில் வேர் பகுதி அடி படாதவாறு ஓரங்களில் பள்ளம் தோண்டி சேகரித்த தோல்களைப் போட்டு மண்ணை மூடி வைத்து விடவும். மண்ணைத் தோண்டும் போது உள்ளே வேர்ப்பகுதி அடிபட்டால் செடி காய்ந்து போய் விடும். ஓரிரு நாட்களில் நீங்கள் வைத்த தோல் கழிவுகள் உரமாகி விடும். இதனை வாரம் ஒரு முறை செய்ய செடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். இந்த இரண்டு வேலைகளையும் சரியாக செய்து விட்டால் போதும். புதியதாக முளைக்கும் ஒரே கிளையில் 10 மொட்டுக்கள் கூட கொத்து கொத்தாக விரைவிலேயே விட்டுவிடும். சிறிய செடியாக இருந்தாலும் நிறைய பூக்கள் கொடுக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News