விளையாட்டு போட்டிகள் 14 TH JUNE
துப்பாக்கி சுடுதல்
உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டிஜெர்மனியின் முனிக் நகரில் நடக்கிறது. நேற்று பெண்களுக்கான 10மீ., ஏர் பிஸ்டல் போட்டி நடந்தது.இந்தியா சார்பில் பங்கேற்ற சுருச்சி சிங் 19,தகுதிச்சுற்றில் 588 புள்ளி எடுத்து,2வது இடம்பிடித்தார். ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலம் வென்ற மனுபாகர் (574), 25வதுஇடம் பிடித்து வெளியேறினார்.
பைனலில் கடைசி இருவாய்ப்பு முன், சுருச்சி 2வது இடத்தில் இருந்தார், கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட சுருச்சி 241.9 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
டி. என். பி.எல்., தொடரின் இரண்டாவது கட்டபோட்டி சேலத்தில் நேற்று துவங்கியது. இதில் திருப்பூர்,சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேலம் அணி கேப்டன் அபிஷேக் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.திருப்பூர் அணி 20 ஓவரில் 177/8 ரன் குவித்தது. சேலம் அணி 19.5 ஓவரில் 178/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது
டென்னிஸ்
சீனாவில், ஆண்களுக்கான ஐ.டி.எப்.,டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், சீனதைபேயின் சுங்,ஹாவோ ஹுவாங் மோதினர்.அபாரமாக ஆடிய சசிகுமார் 6,3,6,2 என்றநேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சித்தார்த் விஷ்வகர்மா, அமெரிக்காவின் இவான் ஜு மோதினர்.இதில் சித்தார்த் 6-3, 2-6, 6-4 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஹாக்கி
சிலியில், வரும் டிச.1,13ல்ஜூனியர் பெண்களுக்கான உலககோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி,'சி' பிரிவில் ஜெர்மனி, அயர்லாந்து, நமீபியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக பெல்ஜியம் சென்றுள்ள ஜூனியர் இந்திய பெண்கள் அணி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுடன் 5 போட்டிகளில் விளையாடுகிறது.
முதலிரண்டு போட்டியில் இந்திய அணி,பெல்ஜியத்தை வீழ்த்தியது.மூன்றாவது போட்டியிலும் இந்தியா, பெல்ஜியம் மோதின. இதில் இந்திய அணி 3-2 என 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. இந்தியா சார்பில் சோனம் (4வதுநிமிடம்), லால்தான்ட் லுவாங்கி (32வது), கனிகா சிவாச் (51வது) தலாஒரு கோல் அடித்தனர்.
0
Leave a Reply