நெய் அப்பம்
தேவையான பொருட்கள் -
1கப்பச்சரிசி,1 கப்வெல்லம்,4ஏலக்காய்,1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்,
2 டேபிள்ஸ்பூன்கோதுமை மாவு,ஒரு சிட்டிகை உப்பு,1டேபிள்ஸ்பூன்நெய்,எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை –
பச்சரிசியை கழுவி4 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் ஒரு துணியில் பரப்பிவிட்டு,காய்ந்தவுடன், மிக்ஸி ஜாரில் ஏலக்காய் சேர்த்து,அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவை,ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பேக்கிங் பவுடர், ஒரு பின்ச் உப்பு,போட்டு கலந்து கொள்ளவும்,
பொடித்த வெல்லத்தை, சிறிது தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு, கரைத்து, பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்,.மாவுடன் நெய் மற்றும் வெல்லத்தையும் ஊற்றி, கலந்து கொள்ளவும், கட்டியாக இருந்தால் லேசாகத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்,
மாவு கரண்டியில் எடுத்து ஊத்தும் பதத்திற்கு,இருக்க வேண்டும்.இதனை2 மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடவும்.
இரண்டு மணி நேரம் கழித்து,கடாயில் பொரிப்பதற்கு, தேவையான எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும்,மாவை ஒரு கரண்டியில் எடுத்து, நடுவில் ஊற்றவும்,
சிறிது நேரம் கழித்து,அது மேலே வரும்,ரெண்டு புறமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வந்தவுடன், எடுக்கவும்,சுவையான,இனிப்பான நெய் அப்பம் தயார்,
0
Leave a Reply