பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது நெல்லிக்காய்.
தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவைதான் நெல்லிக்காயின் பூர்வீகம். இது பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது.நெல்லிக்காயில் நட்சத்திர நெல்லிக்காய் என்ற ஒரு வகை உண்டு. பார்ப்பதற்கு நட்சத்திரம் போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் இந்தப் பெயரால் குறிப்பிடப்படுகிறது. இது அரை நெல்லிக்காய் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகளவு நெல்லிக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.
14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 மில்லி கிராம் வைட்டமின் தேவைப்படுகிறது. பெரிய நெல்லிக்காயில் ஏறத்தாழ 600 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. உடலில் உள்ள சூட்டைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும் தன்மையும் நெல்லிக்காய்க்கு உண்டு.
0
Leave a Reply