அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்காக நடைபெற்ற அரசு சேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டங்கில் (24.12.2025) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்காக நடைபெற்ற ஆதார், பிறப்பு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு துவக்கம் உள்ளிட்ட அரசு சேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.அதன்படி, இம்முகாமில் அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள 29 குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ்களும், 26 நபர்களுக்கு பிறப்பு சான்றிதழ்களும், 5 நபர்களுக்கு ஆதார் அட்டைகளும், 5 நபர்களுக்கு வங்கி கணக்குகளும் என மொத்தம் 65 நபர்களுக்கு அரசு சேவை உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர், மாவட்ட நூலக அலுவலகம் சார்பில் குழந்தைகளுக்கான வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்க்கப்பட்டது.மேலும், அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிரதெளஸ் பாத்திமா, மாவட்ட குழந்தை நல அலுவலர் திருமதி இல.மீனாட்சி, குழந்தைகள் இல்லங்களில் உள்ள சுமார் 160 குழந்தைகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply