கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாரதியார் பாடல்.
பாடகர்கள் தேவன் ஏகாம்பரம் மற்றும் சுஷா இணைந்து உருவாக்கியுள்ள‘வருவாய்’என்ற இசை ஆல்பம் புதிய சாதனை படைத்துள்ளது. மகாகவி பாரதியாரின் கவிதைகள் மற்றும் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து பாடகி சுஷா கூறுகையில்,“எட்டு திசைகளிலும் கலைச் செல்வங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பாடிய பாரதியாரின் பாடல்களை உலகின் அனைத்துத் திசைகளுக்கும் கொண்டு சென்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
0
Leave a Reply