இரவு முதல் காலை வரை உடலில் நிகழும் முக்கிய மாற்றங்கள்.
நம் உடல் ஒரு இயற்கையான உயிரியல் கடிகாரத்தின்(BodyClock) அடிப்படையில் செயல்படுகிறது. இரவு நேரத்தில் தூக்கம், ஹார்மோன் சுரப்பு, செரிமானம் மற்றும் உடல் சீரமைப்பு போன்ற பல செயல்பாடுகள் நடைபெறுகின்றன.
இரவு முதல் காலை வரை உடலில் நிகழும் முக்கிய மாற்றங்கள்!
இரவு9மணி-11 மணி-
உடல் மெதுவாக ஓய்வு நிலைக்குச் செல்கிறது. தூக்கத்திற்குத் தேவையான மெலடோனின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது.
இரவு 11 – அதிகாலை 1 மணி -
ஆழ்ந்த தூக்கத்திற்கான உடல் தயாரிப்பு மற்றும் உடல் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
அதிகாலை1மணி-3 மணி -பலருக்கும் ஆழ்ந்த தூக்கம் தொடரும் நேரம். இந்த நேரத்தில் உடல் திசுக்களின் பராமரிப்பு மற்றும் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.
அதிகாலை3மணி-5 மணி -உடல் தூக்கச் சுழற்சியின் அடுத்த கட்டங்களுக்குச் செல்கிறது. சுவாசம் மற்றும் இதயத் துடிப்பில் இயல்பான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
காலை5மணி-7 மணி -உடலின் இயற்கையான விழிப்பு செயல்முறை தொடங்குகிறது. குடல் இயக்கம் அதிகரித்து மலம் கழிக்கத் தூண்டுதல் ஏற்படலாம்.
காலை7மணி-9 மணி-
உடல் விழிப்பு நிலைக்கு வந்து செரிமானச் செயல்பாடுகள் சுறுசுறுப்படைகின்றன. சத்தான காலை உணவை எடுத்துக்கொள்ள ஏற்ற நேரம்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நினைவில் கொள்ள வேண்டியவை!
தினமும் போதுமான நேரம் தூங்குங்கள்.
முடிந்தவரை ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.
இரவில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
தூங்குவதற்கு முன் அதிக உணவைத் தவிருங்கள்.
காலையில் எழுந்ததும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள்.
நல்ல தூக்கம் = நல்ல ஆரோக்கியத்தின் அடித்தளம்!
0
Leave a Reply