கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் (25.11.2026) நடைபெற்றது.குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் நலனை உறுதி செய்வது அனைவரின் முக்கியக் கடமையாகும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் குழந்தைகள் மீதான பிற வகையான சுரண்டல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
குழந்தைகள் மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் பாதுகாத்திட வேண்டும். எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் சேர்த்து நல்வழி படுத்திட வேண்டும். இதன் மூலம் தனி நபரின் விவரங்கள் தெரியாத வகையில் இந்த பாதுகாப்புக் குழுக்கள் செயல்படும்.
கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் தங்களது கிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளைக் கண்டறிந்து, அவற்றிற்கு உரிய தீர்வு காண்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தல், இடைநிற்றலைத் தடுத்தல், ஆதரவற்ற மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட வழிவகை செய்தல் வேண்டும்.மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்த தகவல்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரிவித்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் அச்சமின்றி, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சூழலில் வளர்வதை உறுதி செய்ய கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருமதி மீனாட்சி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி பிரியதர்ஷினி, மாவட்ட கல்வி அலுவலர், பாதுகாப்பு குழு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply