மோகன்லால் பட இயக்குனர் வேண்டுகோள்.
தொடர் வெற்றிகளுக்குப் பிறகு நடிகர் மோகன்லால், இயக்குனர் தருண் மூர்த்தி கூட்டணியில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் ‘அதிமனோகரம்’. இப்படம் வரும் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோகன்லால் ரசிகர்கள் பல்வேறு போஸ்டர்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து இயக்குனர் தருண் மூர்த்தி கூறுகையில்,“தயவுசெய்து இதுபோன்ற போஸ்டர்களை உருவாக்கி, படத்தின் கதை இப்படித்தான் இருக்குமோ என்ற குழப்பத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்த வேண்டாம். அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply