டிசம்பர் 4-ல் வெளியாகிறது ‘பீட்சா பாய்ஸ்’.
சேகர் கேசவ் இயக்கி,இசையமைத்துள்ள திரைப்படம்‘பீட்சா பாய்ஸ்’.இதில் சிவம் சங்கர் மற்றும் ஆல்பியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரத் லோஹிதாஸ் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் கூறுகையில்,“பெங்களூருவை பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளோம். பீட்சா கடையை மையமாக வைத்து நான்கு நண்பர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதையாக இது அமைந்துள்ளது. இதில் கதாநாயகன் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் வருகிறார். இதற்காக அவர் 20 கிலோ எடையை அதிகரித்து, பின்னர் அதைக் குறைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.
0
Leave a Reply