பச்சை பட்டாணி பன்னீர் மசாலா
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
முந்திரி - 8-10 (ஊறவைத்தது)
இஞ்சி - 1 அங்குலம்
பூண்டு - 5-6 பற்கள்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய்/வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிக்சியில் தக்காளி, இஞ்சி, பூண்டு, முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்து நைசாக
அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்,வெண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை
பொன்னிறமாக வதக்கவும்.
அரைத்த தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து
எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பட்டாணி வேகும் வரை
மூடி சமைக்கவும்.
இறுதியாக பன்னீர் துண்டுகளைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க
வைத்து, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
பன்னீரை கடைசியாக சேர்த்தால் மென்மையாக இருக்கும். விருப்பப்பட்டால் சிறிது பிரஷ்
கிரீம் சேர்க்கலாம்.
0
Leave a Reply