சமையலில் செய்யும் தவறுகளைச் சரிசெய்ய....
இனிப்பு அதிகமாகிவிட்டால்: சிறிதளவு வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்து சுவையை சமநிலைப் படுத்தலாம்.
உப்பு அதிகமாகிவிட்டால்: சில துண்டுகள் பச்சை உருளைக்கிழங்கைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். பரிமாறும் முன் உருளைக்கிழங்கை அகற்றிவிடலாம்.
காரம் அதிகமாகிவிட்டால்: சிறிதளவு கிரீம், தயிர் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து காரத்தைத் தணிக்கலாம்.
பாஸ்தா அதிகமாக வெந்துவிட்டால்: சிறிதளவு ஆலிவ் எண்ணெயில் அதிக தீயில் சில நிமிடங்கள் வதக்கலாம்.
புளிப்பு அதிகமாகிவிட்டால்: சிறிதளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து புளிப்பை சமநிலைப்படுத்தலாம்.
கிரேவி கட்டியாகிவிட்டால்: மிக்சியில் சிறிது அரைக்கலாம் அல்லது நன்றாக விஸ்க் (Whisk) செய்து கட்டிகளை நீக்கலாம்.
0
Leave a Reply