காரியாபட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று(21.08.2024) நடைபெற்ற விழாவில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் 360 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.ஒரு நாட்டினுடைய சமுதாயம் முன்னேற வேண்டும் என்று சொன்னால், தலைநிமிர்ந்த சமுதாயம் பெற வேண்டும் என்றால் அந்த நாட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கல்வி கற்க வேண்டும்.
அதனைத்தான் நமது தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பெண் கல்வி மற்றும் உயர்கல்வியில் சிறந்து இருக்கின்றோம். ஆண்களை விட பெண்களே முதலிடத்தில் வரக்கூடிய ஒரு இடத்தை நாம் இன்று பெருமையோடு பெற்றிருக்கின்றோம். அரசாங்கம், ஆட்சித்துறை, விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் சாதனையாளர்களாக பெண்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் கல்வியால் வந்திருக்கக்கூடிய புரட்சிதான்.அந்த கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான், அனைத்து இடங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. நமது விருதுநகர் மாவட்டத்தில் எந்த பகுதியாக இருந்தாலும் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என்று இந்த மாவட்டம் முழுமைக்கும் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதற்கும் மேலே பள்ளிக் கல்வி முடித்து பெண்கள் உயர் கல்விக்கு போக வேண்டும் என்று தான் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000ஃ- வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025-ம் நிதியாண்டில் 9,669 மாணவர்களுக்கும் 8,100 மாணவிகளுக்கும் என மொத்த 17,769 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.இன்று காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 360 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.இது போன்ற கல்விக்கான கட்டமைப்புகள், விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவது போன்றவைகள் எல்லாம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டும். கல்வி உங்களானதாக இருக்க வேண்டும். அந்த கல்வி மூலமாக நம்முடைய குழந்தைகள் மிகப் பெரிய சாதனையாளர்களாக, விஞ்ஞானிகளாக, பெரிய பதவிகளில் வர வேண்டும் என்பதற்கு தான் என தெரிவித்தார்.
0
Leave a Reply