25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


திருமாலின் சயன கோயில்களின் சிறப்பம்சங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருமாலின் சயன கோயில்களின் சிறப்பம்சங்கள்

ஜல சயன பெருமாள் 

108 திவ்ய தேசங்களில் 107திவ்ய தேசமாக திருப்பாற்கடல் கூறப்படுகிறது.மனிதர்கள் தங்களுடையை இந்த பூத உடலுடன் தரிசனம் செய்ய முடியாது. ஏனெனில் ஸ்ரீ வைகுண்டத்தில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலை இந்த பிறவிக்கு பின்னரே தரிசிக்க முடியும்.

ஸ்தல சயனம்

மாமல்லபுரத்தில் உள்ள திருக்கடல்மல்லை ஸ்தல சயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார் திருக்கோயில் 63வது திவ்ய தேச கோயில்காக போற்றப்படுகிறது.இங்கு அமைந்துள்ள திருமால் தனது வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேஷன் மீது சயன நிலையில் காட்சி தருகிறார்.

புஜங்க சயனம்

ஸ்ரீ ரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக போற்றப்படுகிறது. விண்ணகரத்தில் அமைந்துள்ள திருமால் புஜங்க சயனத்தில் காட்சி தருகிறார். அதாவது ஆதிசேஷன் மீது சயன நிலையில் அருள்பாலிக்கின்றார்.

ஸ்ரீரங்கம் கோயில் உருவாக காரணமே உச்சி பிள்ளையாரின் திருவிளையாடல் தான் தெரியுமா?- இதோ புராண கதை

உத்தியோக சயனம்

கும்பகோணம் திருக்குடந்தையில் சாரங்கபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இது 12வது திவ்ய தேசமாகும். இங்குள்ள திருமால் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து எழுந்து திருமால் பேசுவது போன்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இது வேறு எந்த கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்த கோயிலாகும்.

வீர சயனம்

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில் 59 திவ்ய பிரதேசமாகும். இந்த கோயிலின் சிறப்பு என்ன வென்றால் திருமால் தான் எங்கு உறங்குவது என சாலிஹோத்ர முனிவரிடம் கேட்டார். அப்போது அவர் காட்டிய இடம் தான் தற்போது திருவள்ளூரில் வீர சயன கோலத்தில் வீரராகவப்பெருமாளாக அருள்புரிகிறார்.

போக சயனம்

திருவள்ளூர், சீர்காழி அருகே அமைந்துள்ள திருச்சிரகூடம் அமைந்துள்ளது. இங்குள்ள தாயார் புண்டரீக வல்லி சமேத கோவிந்தராஜர் பெருமாள் கோயிலில் திருமால் போக சயனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இந்த திருத்தலம் 40வது திவ்ய தேசமாகும்.

தர்ப்ப சயனம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதர் - கல்யாண வல்லி தாயார் அமைந்துள்ள கோயில் 105வது திவ்ய தேச கோயிலாகும். இங்கு ஸ்ரீ ராமர் இளைப்பாற தர்ப்பையில் சயனத்ததாகவும், இந்த தர்ப்ப சயன காட்சியாகவே எம்பெருமான் அருள்பாலிக்கிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

பத்ர சயனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள வடபத்ரசாயி - ஆண்டாள் கோயில். இங்கு எம்பெருமான் ஸ்ரீரங்கமன்னார் பெருமாளாக வடபத்ர சயன கோலத்தில் காட்சி தருகிறார். பத்ர என்றால் ஆலமரத்து இலை என்று பொருள். இது 99வது திவ்ய தேசங்களில் ஒன்று.

மாணிக்க சயனம்

செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலையில் அமைந்துள்ள கோயில் தான் திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில். திருமால் ஸ்ரீ அரங்க நாயகி சமேத ஸ்ரீ அரங்கநாதர் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள பெருமாள் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளிலும் தரிசிக்கலாம். இது 61வது திவ்ய தேசங்களில் ஒன்று.

பாம்பணை சயனம்

திருமயம்ஸ்ரீசத்தியமூர்த்திபெருமால் 43வதுதிவ்யதேசமாகும் இங்குசத்தியமூர்த்தி,திருமெய்யர்எனஇரண்டுமூலவர்கள்உள்ளனர்.சைவ,வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த கோயில் அமைந்துள்ளது.இங்கு பள்ளி கொண்ட நிலையில் இருக்கும் பெருமாள் அரைக்கண்ணை மூடிய நிலையில் இதழ்களில் மென்மையான நகைப்புடன் பாம்பணை மேல் வலது கரம் ஆதிசேசனை அணைத்தபடி காட்சி தருகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News