ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் இன்று தொடக்கம்!
ஹாங்காங்கில் 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று தொடங்குகிறது. இத்தொடரில் இந்தியா சார்பில் லக்சயா சென், ஸ்ரீகாந்த், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, அஷ்மிதா, அன்மோல் கார்ப் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் ஹைலோ ஓபன் மற்றும் ஜப்பான் மாஸ்டர்ஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற லக்சயா சென், இத்தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினால் 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' தொடருக்குத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெறுவார்.
0
Leave a Reply