25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


வாட்ஸ் அப் மூலம் மின்சார புகார்களை பதிவு செய்யலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாட்ஸ் அப் மூலம் மின்சார புகார்களை பதிவு செய்யலாம்.

94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

தமிழகத்தில் மின்சார சேவை தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக பதிவு செய்து, அவற்றை விரைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மின்வாரியம் சார்பில் ‘வாட்ஸ் அப் டி.என்.இ.பி. சாட்பாட்’ என்ற புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்குவதற்காக மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மின்சார விநியோகம் உள்ளிட்ட சேவைகள் தொடர்பான புகார்களை எளிதாக பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்தகட்டமாக, மின்சார சேவைகள் குறித்த புகார்களை விரைவாகப் பெற்று, அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் காலதாமதமின்றி கொண்டு சேர்த்து, உரிய காலத்தில் தீர்வு காணும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் ‘டி.என்.இ.பி. சாட்பாட்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையைப் பயன்படுத்த, பொதுமக்கள் தங்களது வாட்ஸ் அப் செயலியில்94987 94987 என்ற எண்ணை பதிவு செய்து, அதில் ‘Hi’ என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

அதன்பின்னர், மொபைல் போன் எண் அல்லது மின் இணைப்பு எண்ணின் மூலம் புகார் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உடனடியாக அனுப்பப்படும். தொடர்ந்து, புகாரை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த புதிய வசதியின் மூலம் பொதுமக்கள் மின்சார சேவைகள் தொடர்பான புகார்களைஎளிதாகவும், விரைவாகவும் பதிவு செய்து, உரிய தீர்வைப் பெறலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News