பாரம்பரிய சுவையில் தினைப்பால் கூழ்.
தினைப்பால் கூழ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
தினை - 1 கப்
புளித்த மோர் - தேவையான அளவு
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தினையை நன்றாகக் கழுவி, 4 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின், மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, மெல்லிய துணியைப் பயன்படுத்தி தினைப் பாலைத் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் கொதித்ததும், எடுத்து வைத்துள்ள தினைப் பாலை ஊற்றி மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். கூழ் நன்கு வெந்து கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்.
நன்றாக ஆறிய பிறகு, அதனுடன் கெட்டிப் புளித்த மோர், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்தால் சுவையான தினைப்பால் கூழ் தயார்!
நன்மைகள்:
நரம்புகளைப் பலப்படுத்தி, உடலுக்கு அபரிமிதமான பலத்தைத் தரும்.
இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்தது.
இரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
.தினை நார்ச்சத்து, புரதம் மற்றும் சில தாதுச்சத்துகளை வழங்கும் சத்தான சிறுதானியமாகும்.
0
Leave a Reply