25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2024-2025 கோடை பருவத்தில் இது வரையிலும் 3,376 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.5.83 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2024-2025 கோடை பருவத்தில் இது வரையிலும் 3,376 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.5.83 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025 கோடை பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திடும் பொருட்டு இராஜபாளையம், வத்ராயிருப்பு மற்றும் காரியாபட்டி ஆகிய வட்டங்களில் 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்  திறக்கப்பட்டு  கடந்த 26.05.2025 முதல் செயல்பட்டு வருகிறது.

        மேற்படி நெல் கொள்முதல் நிலையங்களில் 14.06.2025 வரை 393 விவசாயிகளிடமிருந்து 3375.960 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.5,83,00,000/- (ரூபாய் ஐந்து கோடியே என்பத்து மூன்று லட்சம் மட்டும்) விவசாயிகளின்  வங்கி கணக்குகளில் நேரடியாக  பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள்  அறுவடை செய்த நெல்லினை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.                                                                                           

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News