இந்தியா-பூடான் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்அரை இறுதியில் இன்று மோதல்.
20 வயதுக்கு உட்பட்டோர் 8-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் ,பங்கேற்றுள்ள 7 அணிகள் இருபிரிவாகபிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. அரைஇறுதிக்கு லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் நேபாளம் (7 புள்ளி), பூடான் (4 புள்ளி) அணிகள் முறையே முதல் இருஇடங்களை பிடித்து முன்னேறியது. இலங்கை (3 புள்ளி), மாலத்தீவு (2 புள்ளி) அணிகள் 3-வது, 4வது இடம் பெற்று வெளியேறின. 'பி' பிரிவில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, ஒரு டிரா) சமநிலை வகித்தாலும் கோல்வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியா முதலிடத்தையும், வங்காளதேசம் 2-வது இடத்தையும் பெற்றுஅரைஇறுதிக்குள் நுழைந்தன. பாகிஸ்தான் (2 ஆட் டங்களிலும் தோல்வி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் 2வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பூடானை (இரவு 8.30 மணி) சந்திக்கிறது. வலுவான இந்திய அணியின் சவாலை பூடான் சமாளிப்பது சிரமமே. மற்றொரு அரைஇறுதியில் நேபாளம்- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
0
Leave a Reply