குத்துச்சண்டை பைனலில் தங்கம் , வெள்ளி வென்று குவித்த இந்திய வீரர், வீராங்கனைகள்.
உலக 15 குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ் தொடர் கிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,), பைனலுக்கு முதன்முறையாக இந்திய நட்சத்திரங்கள் முன்னேறி வரலாறுபடைத்தனர்.
இந்தியாவின் அருந்ததி பெண்களுக்கான 70 கிலோ பிரிவு பைனலில், 5-0 என உஸ்பெகிஸ்தானின் அசிசா ஜோகிரோவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இந்தியாவின் மீனாக் ஷி பெண்களுக்கான 48 கிலோ பிரிவு பைனலில் ,5-0 என்ற கணக்கில் உஸ் பெகிஸ்தானின் போசி லோவா பர்ஜோனாவை தோற்கடித்து தங்கத்தை வென்றார்.
இந்தியாவின் பிரீத்தி பெண்களுக்கான 54 கிலோ பிரிவு பைனலில் ,5-0 என இத்தாலியின் சிரின் சராபியை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார். (80+ கிலோ) இந்திய வீராங்கனை நுபுர் ஷியோரன் 5-0 என உஸ்பெகிஸ்தானின் சோடிம் போவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இந்திய வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (51 கிலோ, எதிர்: ஜூவான் யி குவோ, சீனதைபே), ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ, எதிர்: உ ஷிஹ் யி, சீனதைபே), பர்வீன் ஹூடா (60 கிலோ, எதிர்: தகுச்சி அயாகா, ஜப்பான்) மற்ற எடைப்பிரிவு பைனலில் தங்கத்தை கைப்பற்றினர்.
இந்தியாவின் பூஜா ராணி (80 கிலோ) பைனலில் வெள்ளி பதக்கம் கைப்பற்றினார்.
சச்சின் சிவாச், ஹிதேஷ் குலியாஆண்களுக்கான பைனலில் தங்கம் வென்றனர். இந்திய வீரர்களான ஜதுமணி சிங் (50 கிலோ), அங்குஷ் பங்கல் (80 கிலோ), அபினாஷ் (65 கிலோ), பவான் பர்த்வால் (55 கிலோ), நரேந்தர் (+90 கிலோ) பைனலில் வெள்ளி வென்றனர்.
0
Leave a Reply