ஹாங்காங்கை எதிர்கொள்ளும் இந்திய பெண்கள் அணி.
பெண்களுக்கான ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
‘ஏ’ பிரிவில் இந்தியா, தாய்லாந்து, ஹாங்காங், பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே தாய்லாந்தை வீழ்த்திய இந்திய அணி, இன்று நடைபெறும் தனது 2-வது லீக் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியிலும் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்த இந்திய அணி முனைப்புடன் களமிறங்குகிறது.
0
Leave a Reply