25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா மெகா வெற்றி: 3 நாட்களிலேயே டெஸ்ட் முடிந்தது!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா மெகா வெற்றி: 3 நாட்களிலேயே டெஸ்ட் முடிந்தது!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் ஜூன் 6-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் 3-வது நாளிலேயே ஆப்கானிஸ்தானைச் சுருட்டி இந்திய அணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, லோகேஷ் ராகுல் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் அதிரடி சதங்கள், மற்றும் சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தரின் அரைசதங்கள் உதவியுடன் 8 விக்கெட்டுக்கு 564 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.

அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான், ஃபாலோ-ஆனைத் தவிர்க்க தேவையான 364 ரன்களை நெருங்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ஃபாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆப்கானிஸ்தான் 112 ரன்களுக்கு மீண்டும் சுருண்டது. அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 42 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி வருகிற ஜூன் 13-ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News