சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் நிஹால் சரின் தொடர்ந்து 3 வெற்றியை பதிவு செய்தார்.
சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடர் கோல்கட்டாவில் இந்தியாசார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.முதலில் 'ரேபிட்' முறையிலான போட்டி நடக்கின்றன.நேற்று நடந்த 3 சுற்றில்ஆனந்த், சக வீரர் அர்ஜுன் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 58 வது நகர்த்தலில் ஆனந்தை வென்றார்.
இந்தியாவின் நிஹால் சரின், 4வது சுற்றில்ஹன்ஸ் மோக், 5வது சுற்றில் முர்ஜினை வென்றார். சக வீரர் விதித் குஜ்ராத்தியை 6வது சுற்றில் வென்று, தொடர்ந்து 3 வெற்றியை பதிவு செய்தார்.
0
Leave a Reply