யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுடாய் ஓகிமோட்டோவை எதிர்கொண்டார். கடும் போராட்டத்துக்குப் பிறகு 22-20, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர், பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ரவுனக் சவுகான், சீன தைபேயின் லி யங் சுவிடம் 17-21, 19-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் தேவிகா சிஹாக், டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சனிடம் 21-15, 11-21, 15-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
0
Leave a Reply