விவசாயிகள் 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மழையின் அளவு குறைவாக காணப்படுவதால் வறண்டு காணப்படுகிறது. அதனால் பொருளாதாரத்திலும் பின்தங்கி காணப்படுகிறது.எனவே, மழை பொழிகின்ற பொழுது நிலத்தில் வழிந்தோடுகின்ற மழைநீரை வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அல்லது பண்ணைக்குட்டைகளில் மழைநீரை சேகரித்து வைப்பதன் மூலம் நிலத்தடி நீரின் அளவு உயர்வதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் சேமிக்கப்படும் மழைநீர்கள் பயிர்கள் நீரில்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும் பொழுது பயிர்களுக்கு தக்க நேரத்தில் உயிர் நீர் பாசனம் மற்றும் துணை பாசனம் அளித்து பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வழி வகை செய்வதற்கு இந்த பண்ணைக்குட்டைகள் பயன்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் வறட்சி பாதிப்பு குறைப்பிற்கான ஊக்குவிப்பு உதவி திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டிற்கு 40 எண்கள் பண்ணைக்குட்டைகள் ரூ.56.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருதுநகர் வட்டாரம் வளையபட்டி, இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், அருப்புக்கோட்டை வட்டாரம் கோபாலபுரம், டி.கொப்புசித்தம்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளும், காரியாபட்டி வட்டாரம் பாம்பாட்டி, அழகியநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், திருச்சுழி வட்டாரம் மயிலி, கீழ்குடி, வடக்குநத்தம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், நரிக்குடி வட்டாரம் நத்தைக்குளம், சொட்டமுறி, ஆணைக்குளம், அகத்தாக்குளம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், திருவில்லிப்புத்தூர் வட்டாரம் கீழராஜகுலராமன், அயன்நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், வத்ராப் வட்டாரம் குன்னூர், சுந்தரபாண்டியம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், இராஜபாளையம் வட்டாரம் கோபாலபுரம், குறிச்சியார்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளும், வெம்பக்கோட்டை வட்டாரம் வெம்பக்கோட்டை, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், சாத்தூர் வட்டாரம் போத்திரெட்டியபட்டி, பெத்துரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளும், சிவகாசி வட்டாரம் வெள்ளுர், எரிச்சநத்தம் ஆகிய கிராமங்களில் ஆர்வம் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களுடன் கீழ்க்கண்ட அலுவலகத்தினையோ அல்லது வட்டார பொறியாளர்களையோ தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும் (9786390851), திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் திருவில்லிபுத்தூர், வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகத்தையும் (9080084339) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply