‘டாக்சிக்’ டிரைலருக்கு இந்தியில் அமோக வரவேற்பு.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்சிக்’. இப்படத்தின் டிரைலர் சனிக்கிழமை ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியானது.
வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 52.8 மில்லியன் பார்வைகளை டிரைலர் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தி பதிப்பு 24 மில்லியன் பார்வைகளுடன் முன்னிலையில் உள்ளது. கன்னடம் மற்றும் தமிழ் பதிப்புகள் தலா 11 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு 10 மில்லியன் பார்வைகளையும், மலையாளம் 4 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளன.
யஷ் நடிப்பில் முன்பு வெளியான ‘கே.ஜி.எஃப்’ டிரைலர் 106 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்த நிலையில், ‘டாக்சிக்’ டிரைலர் அதைவிட குறைவான பார்வைகளை பெற்றுள்ளது.
0
Leave a Reply