தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One stop center) திறந்து வைத்தார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் (22.07.2026) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ரூ.12.58 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினை திறந்து வைத்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.16 இலட்சம் மதிப்புள்ள மின்கல சக்கர நாற்காலிகளையும், 3 அறிவு சார் குறைவு உடைய குழந்தைகளுக்கு ரூ.27,900/- மதிப்புள்ள அறிவு சார் உபகரணங்களையும் என மொத்தம் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.44 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் வழங்கினார்
மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக அரசால் 38 மாவட்டங்களிலும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டு, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜூன்"2025 முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் கூட விடுபடாமல் கணக்கெடுத்து, அவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை(UDID) மற்றும் மறுவாழ்வு சேவை வழங்குவதற்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 32,696 மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் 13 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு 6 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, இராஜபாளையம், விருதுநகர் - கன்னிசேரிபுதூர், வெம்பக்கொட்டை - கல்லமநாயக்கன்பட்டி) கடந்த மார்ச் 2026 ஆம் மாதம் முதல் தொடங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 13 வட்டார ஓரிட சேவை மையங்களில் சிவகாசி நகர ஒருங்கிணைந்த சேவை மையம் 1500 சதுர அடியில் ரூ.12.58 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு இன்று (22.07.2026) சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் 1 உளவியல் ஆலோசகர்(Counceller cum case worker), 1 தசைப்பயிற்சியாளர் (Physiotherapist), 2 சிறப்பு கல்வி பயிற்றுனர் (Special Educator - ID & Special Educator - HI), 3 சமூகப் பணியாளர் (Community Facilitators). 7 சமூக மறுவாழ்வு பணியாளர் (Community Rehabilitation Workers) மற்றும் இம்மையத்தின் பணியாளர்களை கண்காணிப்பதற்கு 1 வட்டார ஒருங்கிணைப்பாளர் என மொத்தம் 15 முன்களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மையத்தில் சிறப்பு கல்வி, பிசியோ தெரபி, உளவியல் ஆலோசனை, மறுவாழ்வு உதவிக்கான ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது.
இம்மையத்தின் இதர சேவைகளாக வாழ்க்கை திறன், கல்வி, பெற்றோர் /பாதுகாவலர்களுக்கான பயிற்சி, UDID அட்டை விண்ணப்பிக்க, அரசு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பித்தல், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல், உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பித்தல், புகார்கள் பரிசீலித்து தீர்வு காண வழிகாட்டுதல் போன்றவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த சேவை மையத்தினை அணுகி பயன்பெறலாம் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S.,சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply