25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


ஜோசப் விஜய்யின் ஜேரான விஜயம் |   முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அஸ்தமனம். !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜோசப் விஜய்யின் ஜேரான விஜயம் | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அஸ்தமனம். !

 மக்களுக்கு சொத்து, சுகம் மட்டும் போதாது, நல்லாட்சி மிக மிக முக்கியம்.தமிழ் நாட்டில் கடந்த 55 ஆண்டுகளாக மக்கள் ஆட்சியா ? மன்னர் ஆட்சியா ? மக்களின் பொறுமைக்கும், ஒரு எல்லை உண்டல்லவா ? பொறுத்து, பொறுத்து வெடித்த தமிழக மக்கள் நல்லதொரு தீர்ப்பை, இந்தத் தேர்தலில் கொடுத்திருக்கின்றனர்,என்றே சொல்லலாம். திமுக, அதிமுக, ஆட்சிக் காலங்களில் ஒருவருக்கொருவர் மாற்றி, மாற்றி அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் செய்தனரே தவிர, நல்லாட்சியைக் கொடுக்கவே இல்லை. ஆட்சி கெட்டுச் சீரழிந்துள்ளது.

இந்த இரண்டு கட்சிகளில் உள்ள அமைச்சர்கள் அனைவருமே தங்கள் காலத்திற்கும் அடுத்த 10 ,15, தலைமுறைக்கும் சொத்துக்களைத்தான் சேர்த்தனர். எங்கும் கொள்ளை! எதிலும் கொள்ளை! பாக்தாத்திருடர்கள் தோற்கும் அளவிற்கு கொள்ளை!ஆட்சியாவது நன்றாகச் செய்தார்களா ? அதுவும் இல்லை, அதுவும் திமுக ஆட்சியில் போதைக் கலாச்சாரம், கரைபுரண்டு ஆண், பெண், ஏன் குழந்தைகளையும் அடிமை யாக்கியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியானது.

இன்னும் சிறிது காலம் இவர்கள் ஆட்சியில் இருந்தால் நம் தமிழ்நாட்டை கூறு போட்டு பங்கிட்டு, விற்று வெளிநாட்டில் முதலீடு செய்து விட்டு, தப்பி ஓடிவிடுவார்கள்.  தமிழ்நாட்டில் இவர்கள் ஆட்சி செய்த பொழுதெல்லாம் மத்திய அரசை பகைத்துக் கொண்டு, தாங்கள் ரெம்ப நல்லர்களைப் போல பிம்பம் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு அரசாங்கமே மது ஆலைகளை திறந்து வைத்துக் கொண்டு ,அதிலிருந்து வரும் பணத்தை மக்களுக்கு இலவசங்களைத் தருகிறது, என்றால் அந்த நாடு என்னவாகும் என்று சிந்திக்கக் கூடவா மக்களுக்குத் தெரியாது. சரியான பாடம் புகட்டி விட்டார்கள்.

பதவி எடுத்த நாளிலிருந்து திமுக இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவதும், சனாதன தர்மத்தை அழிப்போம். என்று கூறுவதும் எவ்வளவு அகம்பாவம், ஆணவம். இந்துக் கோவில்களின் வருமானத்தை, இவர்கள் யார்? இதைக் கையாள்வதற்கு ? தமிழ்நாட்டில்உள்ள85%இந்துக்களின்பாரம்பரியத்தைஅலட்சியப்படுத்துவதுபோன்றஅட்டுழியங்கள் கொஞ்ச ,நஞ்சமல்ல,தமிழ்நாட்டில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும், கிருஸ்தவர்களும், சண்டையா போடுகின்றனர். எல்லோரும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இனக் கலவரங்களை உண்டாக்க, இவர்கள் செய்யும் செயல்கள் அநியாயம், 

18 வயதிலிருந்து 24 வயதுவரை உள்ள 1 கோடியே 20 லட்சம் தமிழக இளம் வாக்காளர்கள் பாக்தாத்திருடர்களின் அட்டுழியங்களை கவனித்து ஓட்டளித்துள்ளனர்.த.வெ.க கட்சியினர் ஒரு பைசா கூட கொடுக்காமல் எப்படி ஜெயித்தனர் என்பதற்கு இன்னும் பல காரணங்கள் உண்டு. அதிகார துஷ்ப்பிரயோகம், மணல் கொள்ளை, எக்குத் தப்பாக ஏறிய வீட்டு வரி, சொத்து வரி, மின்கட்டண உயர்வு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பழைய முகங்களே வேண்டாம். புது முகத்திற்கு போடலாம் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனம் ரணகளமாகி, த.வெ.க. விஜய்யிற்கு ஓட்டு அளித்துள்ளனர்.

திரைப்படத்தில்  Let me sing a kutty story!

 life is very short நண்பா!  

Always be happy! 

என்ற  பாடல் மூலம் விஜய்யின் ரசிகர்கள் எந்த அளவுக்கு கவரப்பட்டனரோ, அந்த அளவிற்கு தன் நல்லாட்சியிலும் மக்கள் சந்தோஷப்படுவார்கள் என நம்புவோம்.

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை விஜய் சரி செய்வாரா ? சரியாகச் செய்வாரா ? என்பது பலரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மக்களுக்காக செய்வேன் என்பது ஒரளவு நன்றாகச் சிந்தித்து செயல்பட்டுள்ளார் என்றே சொல்லலாம். மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள மாட்டார்கள்.

தேர்தலுக்காகக் கொடுத்த வாக்கைச் சிறப்பாகச் செய்வார் என்று மக்களின் அதீத நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையில், தமிழ்நாட்டு மக்கள் விஜய்யின் விஜயத்தை எதிர்பார்த்துள்ளனர்.

குணா பாஸ்கர் ராஜா.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News