சர்வதேச போட்டிகளில் கோலி 51வது சதம்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 150 ஆஸ்திரேலியா 104 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இராண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 172 ரன் எடுத்திருந்தது.
பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. கேப்டன் பும்ரா வீசிய முதல் ஓவரில் மெக்ஸ்வினி (0) அவுட்டானார். கேப்டன் கம்மின்ஸ் (2) சிராஜ் வேகத்தில் வீழ்ந்தார். பும்ரா பந்தில் தடுமாறிய லபுசேன் வீழ்ந்தார்.(3) .மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 12 ரன் எடுத்து தவித்தது. இன்னும் 522 ரன் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலியா தப்ப இயலாது. பவுலர்கள் தொடர்ந்து மிரட்டும் பட்சத்தில் இன்ற இந்திய அணி சுலப வெற்றி பெறலாம்.
30வது சதம் கோலி, நேற்று டெஸ்டில் அடித்தார். அதிக சதம் அடித்தவர் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனை (29) முந்தினார். இப்பட்டியலில் 15 வது இடத்தை சந்தர்பால் (வெ.இ) ஹைடன் (ஆஸி,) உடன் பகிர்ந்து கொண்டார் முதலிடத்தில் சச்சின் (51 சதம்) உள்ளார்.
சர்வதேச போட்டிகளில் கோலி 51வது சதம் (டெஸ்டில் 30 ஒரு நாள் போட்டியில் 50 ஒரு டி-20 சதம்) எட்டினார். சர்வதேச அளவில் அதிக சதம் அடித்தவரில் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியா மண்ணில் அனைத்து வித கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிக சதம் (10) அடித்த வீரரானார் கோலி.
0
Leave a Reply