கொரிய மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்கு அஷ்மிதா, ரக்ஷிதா ஸ்ரீ முன்னேற்றம்.
தென் கொரியாவில் ‘சூப்பர் 300’ அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோர் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறினர்.
காலிறுதியில் இந்திய வீராங்கனைகள் தான்வி சர்மா மற்றும் ரக்ஷிதா ஸ்ரீ மோதினர். முதல் செட்டை தான்வி சர்மா 21-18 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை ரக்ஷிதா ஸ்ரீ 21-19 என வென்றார்.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் ரக்ஷிதா ஸ்ரீ 21-18 என வெற்றி பெற்றார். ஒரு மணி நேரம் 1 நிமிடம் நீடித்த போட்டியில் 18-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ரக்ஷிதா ஸ்ரீ அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ஜப்பானின் ஹினா அகேச்சியை எதிர்கொண்டார். இதில் அஷ்மிதா சாலிஹா 20-22, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
0
Leave a Reply