25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


எல்லாவற்றிலும் ,எங்கும் ரசித்து வாழ கற்றுக்கொள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எல்லாவற்றிலும் ,எங்கும் ரசித்து வாழ கற்றுக்கொள் .

 காட்டு மூங்கில் துளைகளில் காற்று எழுப்பும் அழகு ஓசையைக் கேட்பதற்கு, ஓடும் ஆற்றின் சலசலப்புச் சத்தம் கேட்க ரசனை வேண்டும்.அன்றாட வாழ்வில், சாப்பிடுவது, காபி குடிப்பது, காதல் மிக்க தாம்பத்யம், குழந்தைகளுடன் விளையாட்டு என எல்லாவற்றிலும் வேகம் அல்லது அவசரம் இல்லாமல் ரசித்து வாழ்தலே இன்பம். 

குறிப்பிட்ட விஷயத்தின் மீது சுவை கொள்ளுதல் ரசனை எனப்படும். ரசனை கொண்ட ஒருவரே ரசிகன் அல்லது ரசிகை எனப்படுவார். ரசம் என்பதற்கு 'சாறு' சொல் சுவை, கலை உணர்வு எனப் பொருள்

குற்றால அருவியில் ஆனந்தமாக குளிப்பது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை நிதானமாக ரசிப்பது.

தஞ்சை கோபுர அழகை ரசிப்பது.

நெல்லையப்பர் கோயிலின் துாண்களின் வரும் பலவித சப்தங்கள்.

தென்காசி கோயில் வாசலில் நம்மை உள்ளே போக வைக்கும் வெளியே தள்ளும் தென்றல் காற்றை உணர்தல்.

மதுரை மீனாட்சியம்மனின் மாணிக்க மூக்குத்தியின் அழகு.

சிருங்கேரி சாரதாம்பாளின் ஆபரணங்களின் அழகு.

காஞ்சி காமாட்சியின் மடித்து உட்கார்ந்த நிலை அழகு. 

காருகுறிச்சி நாதஸ்வரம், லால்குடி வயலின், பாலமுரளி கச்சேரி. 

கட்டபொம்மனாக நடித்த சிவாஜியின் வீர வசனம். 

என எங்கும் ரசனைக்கு இடமுண்டு. அதற்கான நேரம், இடம், ரசிக்கக் கூடிய மனம் வேண்டும். அதுதான் கடவுள் தரும் கொடை. பாரதியார் அதையே 'ரசத்தில் தேர்ச்சி கொள்' என்கிறார்.

பாரதியாருக்கு சுற்றிலும் எத்தனை விதமான முட்டுக்கட்டைகள்?

போதிய வருமானம் இன்மை, குடும்பப் பிரச்னை, அரசின் கண்காணிப்பு, ஊரெங்கும் பித்தன் என்ற ஏளனம் எந்தளவிற்கு ரசனை இருந்தால் அவர், 'ரசத்திலே தேர்ச்சி கொள்' என எழுதிஇருப்பார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *