மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், நடைபெற்ற 33-ஆம் ஆண்டு பொதுப்பேரவைக் கூட்டத்தில் 33 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.83 கோடி மதிப்பிலான கடன் உதவி
விருதுநகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்;டுறவு வங்கியில், (27.09.2024) நடைபெற்ற 33-ஆம் ஆண்டு பொதுப்பேரவைக் கூட்டத்தில் 33 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.83 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.வங்கியின் உடைய சேவைகள், பல்வேறு அரசினுடைய திட்டங்கள், வங்கிகளின் வாயிலாக பெறுவதாக இருந்தாலும், இப்படி எந்த ஒரு பணவர்த்தனைக்கும் வங்கிகளின் சேவை வழியாகத்தான் அதை பெற வேண்டும். அது தான் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அடிப்படையானது என்றும், பல்வேறு வங்கிகளுடைய சேவைகள் கிராமப்புறங்களில் இருக்கிறது.
குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ ஒன்றை லட்சம் மகளிர் சுய உதவிக்குழுவில் பெண்கள் இருக்கின்றனர். அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறு சிறு தொழில்களை செய்யக்கூடிய தொழில் முனைவோர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் அல்லது மற்ற வணிக வங்கிகளின் மூலமாகவும் அதிகப்படியான கடன்களை வழங்குவதற்கு மிக முக்கியமான நடவடிக்கைகளை தற்போது ஏற்படுத்தி வருகிறோம்.அதில் கிராமப்புற பகுதிகளில் வணிக வங்கிகள் இல்லாத இடங்களில் கூட கூட்டுறவு சங்கங்களின் வழியிலும் மற்றும் நகர்புற பகுதிகளில் மத்திய வங்கிகளின்; கிளைகள் மூலமும் அதிகப்படியான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தொழில்நுட்பங்கள் மாவட்ட கூட்டுறவு வங்கிகள்; மற்ற தொழில் வங்கிகளை ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது. இதனை பல்வேறு திட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற மத்திய கூட்டுறவு வங்கிகள் முழுமையாக பொது மக்களுடைய சேவைகள் பெறுவதற்கு அனைத்து வசதிகளும் தற்போது இருக்கிறது.கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள் தோறும் இருந்தாலும் , வணிக வங்கிகள் ஒவ்வொரு பகுதியில் இருந்தாலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதை ஒட்டிய நிறுவனங்கள் ஒவ்வொரு நகர்ப்புறத்தில் இருந்தாலும் இன்னும் வங்கி சேவைகளை ஏழை எளிய பொதுமக்களுக்கு எடுத்து செல்வதற்கு நிறைய தேவைகள் இருக்கிறது அந்த தேவைகளை எல்லாம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய வங்கிகளின் பணியாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு நிறைவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply