25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


மாட்ரிட் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இன்று தொடக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாட்ரிட் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இன்று தொடக்கம்.

 ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ,மாட்ரிட் ஓபன் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. பிரெஞ்சு ஓபனுக்கு முன் னோட்டமாக களிமண் தரையில் நடக்கும், இந்தபோட்டியில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண் டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அலியாசிம் (கனடா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), டேனில் மெட்விடேவ் (ரஷியா). முசெட்டி (இத்தாலி), கேமரூன் நோரி (இங்கிலாந்து), அலெக்ஸ்டி மினார் (ஆஸ்திரேலியா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். 'பை' சலுகை பெற்றுள்ள இவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் கால் பதிக்கிறார்கள். காயம் காரணமாக முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோ விச் ஆகியோர் விலகியுள்ளனர்.

 நேற்று இதன் பெண்கள் பிரிவு போட்டி தொடங்கி விட்டது.நடப்பு சாம்பியனான பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினாரைபகினா, அமெரிக்காவின் கோகோ காப், ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக், கனடாவின் விக்டோரியா எம்போகோ, ஒலிம்பிக் சாம்பிய னான சீனாவின் கின்வென் ஜெங், இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி, உக்ரைனின் ஸ்விடோலினா போன்ற நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் ஆட உள்ளனர்.

மொத்த பரிசுத்தொகை இப் போட்டிக்கு ரூ.90கோடி யாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.11 கோடி பரிசுத்தொகையுடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News