25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"சீமைக் கருவேலம் இல்லா விருதுநகர் – பசுமை நிறைந்த விருதுநகர்" திட்டத்தின் கீழ் கூட்டுப்பணியில் சீமைக் கருவேல மரங்கள் (Mass eradication of Prosopis juliflora) அகற்றும் பணிகள் நடைபெறவுள்ளது.

சீமைக் கருவேலம் (Prosopis juliflora) என்பது வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனமாகும். இதன் கட்டுப்பாடற்ற பரவல் காரணமாக பூர்வீக தாவர இனங்கள் அழிவடைவதுடன், உயிரினப் பன்முகத்தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், நிலத்தின் இயற்கை வளம் மற்றும் உற்பத்தித்திறன் குறைவதோடு, மேய்ச்சல் நிலங்கள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதுடன், நில மீட்பு மற்றும் பசுமை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P.(MD) Nos. 16485 & 14699 of 2015 மற்றும் W.P. No. 3075 of 2017 ஆகிய வழக்குகளில் வழங்கியுள்ள உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் "விருதுநகர் செழுமை கருவூலம்" என்ற சிறப்பு முன்முயற்சியின் கீழ், அரசு நிலங்கள் மற்றும் வளாகங்களில் சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அகற்றி, பூர்வீக மர இனங்களை நடவு செய்து சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் பணிகளை பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

  "விருதுநகர் செழுமை கருவூலம்" அரசு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கமாகும். எனவே, விவசாயிகள், நில உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அதற்குப் பதிலாக பூர்வீக மர இனங்களை நடவு செய்யும் பணிகள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான 15.07.2026 அன்று நடைபெறவுள்ளது. இம்முயற்சியில் தன்னார்வத்துடன் அனைவரும் பங்கேற்று பெருமளவு சீமைக் கருவேல மரங்களை அகற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கொள்ளப்படும் பணிகளின் அகற்றுதலுக்கு முன் மற்றும் பின் (Before & After) புகைப்படங்கள், இட விவரங்கள், அகற்றப்பட்ட பரப்பளவு, நடப்பட்ட பூர்வீக மர இனங்கள் மற்றும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை selumaikaruvoolamvnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறப்பாக செயல்படுத்தப்படும் தனிநபர்கள், விவசாயிகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகள் மாவட்ட நிர்வாகத்தால் பாராட்டப்பட்டு, மாவட்ட அளவில் முன்மாதிரிகளாக எடுத்துக்காட்டப்படும்.

  "சீமைக் கருவேலம் இல்லா விருதுநகர் – பசுமை நிறைந்த விருதுநகர்" என்ற உயரிய இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News