டேபிள் டென்னிஸில் இந்திய ஜோடிக்கு 2வது இடம்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.டி.எப்.) வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில், இந்தியாவின் மானவ் தாக்கர்–மானுஷ் ஷா ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஜோடி 3,390 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறியுள்ளது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா–யாஷஸ்வினி ஜோடி 10வது இடத்துக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் தியா–மானுஷ் ஷா ஜோடி 5வது இடத்தை பிடித்துள்ளது. ஹர்மீத் தேசாய்–யாஷஸ்வினி ஜோடி 14வது இடத்தில் தொடர்கிறது.
0
Leave a Reply