25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பேரீச்சம்பழத்திலிருந்து தயார் செய்துள்ள 'மிலாப் கோலா'குளிர்பானம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பேரீச்சம்பழத்திலிருந்து தயார் செய்துள்ள 'மிலாப் கோலா'குளிர்பானம்.

குளிர்பானங்களில், அதிகம் சர்க்கரை சேர்க்கப்படுவதால், அது உடல்நலத்திற்கு கேடு என, எச்சரிக்கப்படுகிறது. இருப்பினும், அதன் சுவைக்கு அடிமையானவர்களால், அவற்றை விட முடியவில்லை.

இந்நிலையில், சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான நிறுவனம், உலகிலேயே முதன்முறையாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த பானத்தை, பேரீச்சம்பழத்திலிருந்து தயார் செய்துள்ளது. இதற்கு, 'மிலாப் கோலா' என, பெயர் சூட்டியுள்ளது.

பேரீச்சம்பழத்திலுள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாஷியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களுடன், செயற்கை இனிப்பூட்டிகள் இல்லாமல் ஆரோக்கிய பானமாகவும் திகழ்கிறது.

சர்வதேச அளவில் தரக் கட்டுப்பாட்டு சோதனைகள் அனைத்தையும்,'மிலாப் கோலா' கடந்து, தற்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த பானத்தின் அறிமுக விழாவில் பங்கேற்ற பலரும், இதை அருந்திவிட்டு, அற்புதமான சுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.தீவிரமாக விளம்பரப்படுத்தப் பட்டால், உலக சந்தையில் தற்போதைக்கு இதற்கு போட்டியில்லை என, கூறுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News