மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழா-2024- வினை அமைச்சர்கள் துவக்கி வைத்தார்கள்
மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்- மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் (27.09.2024) அன்று "மரமும், மரபும்"- என்ற பொருண்மையின் கீழ், நடைபெற்ற விருதுநகர் மூன்றாவது புத்தக திருவிழா- 2024- னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மற்றும் துணை இயக்குனர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்,இ.வ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தகவாசிப்பு முக்கிய பங்கு வகுக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்த வேண்டும். புத்தகவாசிப்பினை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவித்தார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை 11 நாட்களுக்கு புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் அனைவரும் புத்தகங்களை படிக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கை ஆரம்பிப்பதே புத்தகங்களில் இருந்து தான். அறிவு வளர வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் புத்தகங்களை படிக்க வேண்டும். புத்தகங்களில் தான் ஒவ்வொரு தனிமனிதனுடைய ஆராய்ச்சிக்கு ஏற்றாற்போல புத்தகங்களை வடிவமைத்து இருப்பார்கள். அதனை பார்க்கும் நேரத்தில் நமக்கு புதிய சிந்தனைகள் கிடைக்கும். நமக்கு நல்ல அறிவு வளரும். நாம் பிறரிடம் பேசும் பொழுது நாம் அறிவாளியாக, திறமையானவனாக காட்ட வேண்டும் என்றால் புத்தகத்தை வாசித்தால் மட்டும் தான் அது நடக்கும். எனவே, அனைவரும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.புத்தகத் திருவிழாவானது இன்றைக்கு மாபெரும் இயக்கமாக மாறி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் பெரும் முயற்சியோடு மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற இந்த மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் படைப்பாளிகளுக்கான பெரும் மரியாதை இன்று கிடைத்திருக்கிறது. கரிசல் இலக்கியத்தினுடைய வேறாக இருக்கக்கூடிய கி.ரா. அவர்கள் மறைந்த பொழுது, யாரும் கேட்காத வகையில் கூட அவருக்கு முழு அரசு மரியாதையோடு அவரது இறுதிப் பயணத்தை செய்தவர் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுத்தாளர்களுக்காக அறித்திருக்கக்கூடிய கனவு இல்லம் திட்டம், பல்வேறு எழுத்தாளர்களை கௌரவிக்கக்கூடிய திட்டங்கள், இவை எல்லாம் தமிழ்நாட்டினுடைய இலக்கிய மரபில் புதிதாக வரக்கூடிய எழுத்தாளர்களுக்கும், இந்த எழுத்துக்களின் ஜாம்பவான்களுக்கும், ஒளி விளக்கை அவர் மீது பாய்ச்சக் கூடிய நடவடிக்கையாக இருக்கிறது.
"மரமும், மரபும்"; என்ற தலைப்பில் அதை எடுத்துக் கொண்டு, சூழலிலும் தொன்மையும் ஒருங்கிணைந்திருக்கக் கூடிய அந்த பொருண்மையின் அடிப்படையில் இந்த புத்தகத் திருவிழாவை கட்டமைத்திருக்கிறார்கள்.
நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் இந்த இரண்டு விஷயங்களில் மிகப்பெரிய செல்வத்தை நாம் பெற்று இருக்கிறோம். திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், அது ஒரு காலத்தில் காப்புக்காடுகளாக இருந்த பகுதிகள் கூட சாம்பல் நிற உயிர்கள் சரணாலயமாக மாற்றப்பட்டு இன்று புலிகள் காப்பகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
நம்முடைய மேற்கு மலை தொடர்ச்சி மலைகளில் மட்டுமே இருக்கக்கூடிய தாவரங்கள், வன உயிரினங்கள், ஊர்வன வகைகள் குறித்து இந்த புத்தக திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இமயமலைக்கு முன்பாகவே உருவாகி இருக்கக்கூடிய மேற்கு தொடர்ச்சி மலை என்ற பெருமையை நாம் பெற்றிருக்கிறோம். அங்கு வேறெங்கும் காணப்படாத உயிர்கள் இருக்கின்றன. ஒரு நாட்டின் நிலப்பரப்பு எத்தனையோ கோடிகள் ஆண்டுகளுக்கு முன்பாக உருவாகி இருக்கலாம். இதே விருதுநகர் மாவட்டத்தினுடைய கிழக்குப் பகுதியில் இருக்கக்கூடிய மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்திருக்க கூடிய ஆவியூர் என்கின்ற கிராமம். அங்கே தான் பழைய கற்காலம் என்று சொல்லக்கூடிய பேலியோலித்திக் அங்கே வாழ்ந்த மக்களால் உபயோகிக்கப்பட்ட ஒரு கற்கால கருவியை ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி நம்முடைய விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதி.
முன்னொரு காலத்தில் நாகரிகத்தினுடைய தொட்டில் வெம்பக்கோட்டை வைப்பாறாக இருந்திருக்கின்றது. கீழடி நாகரீகம் உருவாகுவதற்கு முன்பாகவே கூட நம்முடைய வைப்பாற்றிலே, அது உருவாகி இருக்கிறது. பெருங்ககற்காலத்தினுடைய ஈம சின்னங்கள், வரலாற்றுக் கால சின்னங்கள் இவையெல்லாம் தொடர்ச்சியாக வரலாற்றில் இடம் பெறக்கூடிய ஒரு மாவட்டம் இருக்கிறது என்று சொன்னால் அது நம்முடைய விருதுநகர் மாவட்டம். அந்த விருதுநகர் மாவட்டத்தின் உடைய தொன்மையை, அதனுடைய வரலாற்றை, நாம் குறிப்பிடக்கூடிய அந்த காலம் தொடங்கி அண்மைக்கால வரலாறு வரை நிறைந்திருக்க கூடிய இந்த விருதுநகர் மாவட்டத்தின் உடைய செழுமையை, அதனுடைய தொன்மையை, மரபை அதனுடைய சூழலியல் தொன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டு கூடிய வகையில் மிகச் சிறப்பாக இந்த புத்தகத் திருவிழாவை நம்முடைய மாவட்ட நிர்வாகம் வடிவமைத்து உள்ளது.இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய புத்தகங்கள் நம்முடைய அறிவு கண்களை திறப்பதாக இருக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது . தமிழ்நாடு எங்கும் இன்றைக்கு ஒரு மாபெரும் அறிவு புரட்சியை நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்த அறிவு புரட்சி என்பது இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நாம் கங்கை கொண்டாம், கடாரம் கொண்டோம், நம்முடைய சோழ மன்னர்களுடைய படையெடுப்பு கீழ் திசை நாடுகளில் இருந்திருக்கிறது அல்லது ரோம் நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் நம்முடைய கொற்கை முத்துக்களை வாங்கி ரோம் நாட்டினுடைய பொருளாதாரமே போய்விட்டது. அகஸ்டியஸ் காலத்தில் பாண்டிய தூதுவர் சென்றிருக்கிறார் என்றெல்லாம் நாம் சொல்லிக்கொள்ள முடியும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று சிந்தனை மரபு, தத்துவ மரபு. இந்த தத்துவ மரபுதான் மேல்திசை நாடுகளுக்கும், கீழ் திசை நாடுகளுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு வேறுபாட்டை விளக்கக்கூடிய ஒன்று.
சென்னையில் இருக்கக்கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்குகின்ற போது அந்த நூலகத்தினுடைய நுழைவாயிலே என்ன வாசகத்தை பொறிக்க வேண்டும் என்ற போது அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், புத்தகத்தில் உலகத்தை படிப்போம், உலகத்தையே புத்தகமாக படிப்போம் என்று அன்றைக்கு அவர்கள் எழுதியது தான் இன்றைக்கு இருக்கிறது. புத்தகங்கள் உங்கள் கையில் இருக்கக்கூடிய ஆயுதங்கள். அறிவு சுரங்கங்கள். மாணவச் செல்வங்களும் வந்திருக்கக்கூடிய புத்தக ஆர்வலர்களும் இலக்கிய நண்பர்களும் இந்த விழாவை திறன் பட பயன்படுத்திக் கொண்டு சிறந்திட வேண்டும்
எனவே இந்த புத்தகத் திருவிழாவிற்கு அனைத்து பொதுமக்களும் வருகை தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கு மரம் வடிவிலான நினைவு பரிசினையும், விரு அமைப்பிலான இலட்சினையும், புத்தகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், திருச்சுழி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.பொன்னுத்தம்பி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply