பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் சுவையாக இருக்க....
பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல்செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல்" சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
பஜ்ஜி உப்பி வர சமையல் சோடா சேர்க்காமல் கொஞ்சம் இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் உப்பி வரும்.
ஆப்பம் ஸ்பாஞ்ச் போல் வருவதற்கு ஒரு ஸ்பூன் மைதா மாவு ,அரை கப் பால் சேர்த்து கலந்து ஆப்பம் செய்ய ருசியும் கூடும் மெத்தென்றும் இருக்கும்.
தேங்காய் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி,
பூரி, சப்பாத்திக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் கடலை மாவையும் சேர்த்து பிசைந்து சுட்டால் ருசியாக இருக்கும்.
0
Leave a Reply