370 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (21.08.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 370 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களும் முழுமையாக கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.எதிர்காலத்தில் உறுதியான வாழ்க்கை என்ற சூழலை தயார் படுத்திக் கொள்வதற்காகத்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வி மற்றும் சுகாதாராம் ஆகிய இரண்டையும் இரண்டு கண்களாக நினைத்தும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025-ம் நிதியாண்டில் 9,669 மாணவர்களுக்கும் 8,100 மாணவிகளுக்கும் என மொத்த 17,769 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.அதனை துவக்கி வைக்கும் விதமாக இன்று அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 163 மாணவர்கள், 207 மாணவிகள் என 370 நபர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசால் வழங்கப்படும், மிதிவண்டி மாணவர்களுக்கு படிக்கும் காலம் வரையிலும், படிப்பதற்கு பின்பும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாரும் பயன்பெறும். இது போன்ற படிக்கின்ற குழந்தைகளுக்கான அனைத்து உதவிகளையும் செய்து தர தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தயாராக உள்ளது என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply